நாட்டை முழுமையாக திறப்பது குறித்து கோட்டபாய ராஜபக்ஸ அறிக்கை......!
நாட்டை செம்ரெம்பர் மாதத்தில் முழுமையாக திறக்கும் சூழல் உருவாகும். என கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ,முழு உலகமும் தடுப்பூசி வழங்குவதையே கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழியாக கொண்டிருக்கும் நிலையில்
நாங்களும் அதனையே நம்புகிறோம். எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதுடன், நாட்டை விரைவாக திறக்கவேண்டிய கட்டாயம் உள்ளதாகவும்,அல்லாதுபோனால் பொருளாதாரத்தை மீட்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளதுடன், தற்போத 2 மில்லியன் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதுடன்,
இம்மாத நடுப்பகுதியிலும், இறுதி பகுதியிலும் சுமார் 4 மில்லியன் தடுப்பூசி நாட்டுக்கு கிடைக்கும் எனவும், மேலும் 3 மில்லியன் தடுப்பூசியைபெறுவதற்கான இயலுமை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற,
99வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment