யாழை விட்டு தலை தெறிக்க ஓடிய ஆவாகுழு...வெளியான தகவல்!
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோண்டாவில் பகுதியில் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த 14 பேர் கொண்ட குழுவினரின் தாக்குதலில் 07 பேர் படுகாயமடைந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனினும் இந்த மோதல் ஆவா குழு அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் செயலென கூற முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 07 பேர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவரின் நிலைமை ஆபத்தாக உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த சம்பவத்திந்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க சிறப்பு பொலிஸ் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment