health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

 


இதுவரை கொவிட் தடுப்பூசியின் எந்தவொரு தடுப்பூசியையும் ஏற்றிக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐந்து நிலையங்களில் ´சைனோபார்ம்´ தடுப்பூசி வழங்கப்படுகிறது.


கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, தேசிய தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமகாதேவி பூங்கா போன்ற நிலையங்களில் காலை 8.30 தொடக்கம் தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக இதுதொடர்பாக கொவிட்19 தொற்றுபரலை தடுக்கும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதேவேளை வெலிகட, மெகஸின் மற்றும் கொழும்பு சிறைச்சாலை மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கான தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment