அரசாங்கம் வரியை நீக்கினாலும் பால்மா இறக்குமதி செய்ய முடியாது - பால்மா இறக்குமதியாளர்கள்....!
அரசாங்கம் பால் மாவுக்கான இறக்குமதி வரியை நீக்கினாலும் பால் மா இறக்குமதியை தொடர முடியாத சூழலே காணபப்டுவதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இறக்குமதி வரியை நீக்கினால், பால் மா ஒரு கிலோ இறக்குமதியின்போது ஏற்படும் நட்டத்தில் 100 ரூபாவை மட்டுமே தம்மால் ஈடு செய்யக் கூடியதாக இருக்கும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யபப்டும் பால் மாவுக்கான வரி நீக்கப்பட்டாலும் தொடர்ந்தும் ஒரு கிலோ பால் மா இறக்குமதியில் 200 ரூபா நட்டம் உள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, வரி நீக்கப்படும் சூழலில், ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை குறைந்தபட்சம் 200 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என பால் மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment