இன்றைய ராசிபலன் 30/10/2021
மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி உண்டு. உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனைவாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படு வீர்கள். நினைத்ததை முடிக்கும்நாள்.
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்து வந்து பிரச்னை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். உற்சாகமான நாள்.
கடகம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர் நண்பர்களால் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாகஉழைத்து லாபம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.
கன்னி: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். உடன் பிறந்தவர்களால் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்பு களை ஒப்படைப்பார். புகழ் கௌரவம் கூடும் நாள்.
துலாம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.
விருச்சிகம்: குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். விட்டதைப் பிடிக்கும் நாள்.
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.
மகரம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சாதுரியமான நாள்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.
மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். உணர்ச்சி பெருகும் நாள்.
No comments:
Post a Comment