health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய உத்தரவு!

 


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 23 இந்திய மீன்வர்களை யாழ் சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து இந்த மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அகத்தியன், சிவராஜ், சிவசக்தி,சம்பத், முருகன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் உட்பட 23 பேரை யாழ் சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


இதேவேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர். இதனிடையே நேற்று (28) மீனவர்கள் வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதிமன்ற நீதிபதி கிஷாந்தன் மீனவர்கள் அனைவரையும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.


இந்நிலையில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கியுள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ்.சிறைக்கு மாற்றக் கோரி யாழ்.மீன் வளத்துறை அதிகாரிகள் அளித்த மனுவை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப.சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


இதேவேளை இன்று மீனவர்கள் வழக்கில் ஆஜரான இந்திய துணை தூதரக அலுவலக வழக்கறிஞர் மீனவர்கள் 23 பேரையும் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக பேச ஏற்பாடு செய்ய வேண்டும். மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தூதர அதிகாரிகள் வழங்க நீதிபதியிடம் கோரியுள்ளார்.இதற்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி மீனவர்களை இந்திய துணை தூதரகம் சார்பில் யார் நேரில் சந்திக்கிறார்கள் என்ற விபரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் படி உத்தரவிட்டார்.


இதேவேளை வருகின்ற 4 ஆம் திகதி வியாக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் மீனவர்களை சிறைக்கு மாற்றியுள்ளது நாகை மாவட்ட மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment