health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்....!

 




கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று காலை 11.15 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்த ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான பொன்னம்பலம் என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த முதியவர் ஏ9 வீதியைக் கடக்க முற்பட்டுள்ளதாகவும், இதன்போது பாதசாரி கடவையைப் பயன்படுத்தாது அதற்கு அண்மித்த பகுதியின் ஊடாக கடக்க முற்பட்டதாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பரந்தன் திசை நோக்கிப் பயணித்த காரினை அவதானித்த குறித்த முதியவர் வேகமாகக் கடக்க முற்படுகையில் அதன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் குறித்த முதியவரை மோதியுள்ளதாகச் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.விபத்தில் முதியவரின் கால் துண்டாகியுள்ளதாகவும், தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை இடம்பெற்று வந்த நிலையில், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment