யாழில் மனைவியின் கண் முன்னே நஞ்சருந்திய கணவன்; நேர்ந்த சோகம்!
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை தாக்கி விட்டு, மனையின் கண்முன்பு விசம் அருந்திய கணவன், யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த சம்பவம் நடந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இளம் குடும்பப் பெண்ணொருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்றுக்காலை அவரது இரண்டாவது கணவன் வைத்தியசாலைக்குள் நுழைந்து, மனைவியை தாக்கி விட்டு, அவரிடமிருந்த சில ஆவணங்களை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
அதன்பின்னர் சற்று நேரம் கழித்து, மீண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்து, மனைவி சிகிச்சை பெறும் விடுதிக்கு சென்றார். அங்கு சென்றதும் தான் கொண்டு வந்த விசப் போத்தலை எடுத்து, மனைவியின் முன்பாகவே குடித்தார்.
இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டார். எனினும் அதன் பின்பே அவர் ஏற்கனவே வீட்டில் நஞ்சருந்தி விட்டு வைத்தியசாலைக்கு வந்து, போத்தலில் எஞ்சியிருந்ததையே மனைவி முன் குடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரது நிலைமை ஆபத்தானமாக இருந்தமையால், உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment