பாடசாலைகள் திறப்பதால் ஏற்படப் போகும் ஆபத்து - முழுமையாக முடங்கும் ஆபத்தில் இலங்கை....!
பாடசாலை மாணவர்கள் உட்பட அனைத்து பிள்ளைகளுக்கும் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்று அதகரித்துள்ளதாக பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.
தற்போது வரையிலும் கோவிட் தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் உட்பட் சிறுவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் சிறுவர்களுக்கு மத்தியில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோவிட் தொற்று பிள்ளைகளுக்கு இடையில் பரவினால் மீண்டும் ஜனவரி மாதமளவில் பாடசாலைகளை மூட நேரிடும்.
அது மாத்திரமின்றி நாட்டை முடக்க நேரிடும். இதனால் பெற்றோர் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை கட்டமைப்பை தொடர்ந்து நடத்தி செல்வதற்கு பெற்றோர் ஆதரவு வழங்க வேண்டும்.
அதேபோல் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல. அவர்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் பரவும். வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் பரவும். இதனால் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவுடன் செயற்பட வேண்டும்.
மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அவசியமின்றி வெளியே கொண்டு செல்ல வேண்டாம் என அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment