இருவேறு இடங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது....!
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்றுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மது ஒழிப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 61 லீற்றர் கசிப்பும் மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு உபகரணம் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்றுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் சட்டவிரோத கசிப்பினை விற்பனைக்குக் கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவரைத் தருமபுரம் பொலிஸார் வீதிச் சோதனையில் மூலம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 17 லீற்றர் 250 மில்லி லீற்றர் கசிப்பு தருமபுரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், கசிப்பு விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தடையப்பொருட்கள் நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மது ஒலிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment