health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

கால் வாயின் மண் திட்டு சரிந்துஇளைஞன் ஒருவர் பரிதாப உயிரிழப்பு...!

 




கொழும்பு 5 - கிருலப்பனை பகுதியில், ஆழமான கால் வாய் ஒன்றுக்குள் நீர் குழாய் திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மீது, கால் வாயின் மண் திட்டு சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் நேற்று அதிகாலை பதிவாகியுள்ளதாக கூறிய பொலிஸார் , சம்பவத்தில் 19 வயதான நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


கிருலப்பனை பொலிஸ் பிரிவில், பேஸ்லைன் வீதி - எட்மன்டன் வீதி சந்திக்கருகே, சுமார் 4.5 மீற்றர்கள் வரை ஆழமான கால் வாயொன்றில் நீர் குழாய்களை பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.


இந்த பணிகளில் இருவர் ஈடுபட்ட நிலையில், குழாய் இணைப்பு பணியை முடித்த பின்னர், கானில் தோண்டப்பட்ட பகுதியை மண்ணால் மூடும் போது, கால் வாயின் ஒரு பக்க மண் திட்டு சரிந்து 19 வயது இளைஞர் மீது விழுந்ததாக பொலிஸார் கூறினர்.


இதனால் மண்ணுக்குள் புதையுண்டு அந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் , சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment