health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

இருளில் மூழ்குமா இலங்கை? தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு முஸ்தீபு!

 


எதிர்வரும் தினங்களில் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள், துறைமுகம் மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.


தேசிய சொத்துகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக, பல்வேறு தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து, இந்த போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த தகவலை இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால், வெளியிட்டுள்ளார்.


மின்சாரம், துறைமுகம், எரிபொருள், தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் விநியோகம் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


பணிப் பகிஷ்கரிப்பில் மின்சார ஊழியர்கள் ஈடுபடும் பட்சத்தில், நாட்டின் மின்சார விநியோகம் தடைப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை, மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருந்தது.


இந்த நிலையில், குறித்த தொழிற்சங்கம் தொடர் பணிப் பகிஷ்கரிப்பை நோக்கி செல்ல தயாராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment