யாழில் இப்படியொரு அவலநிலை... இதற்கு யார் காரணம்?
மழை நீரை கடலுக்கு அனுப்புவோம் - குடிக்க நீரை காசு கொடுத்து வாங்குவோம். நிலத்தடி நீரினை சேமிப்பது தொடர்பான ஒரு கலந்துரையாடலின் போது, கதைக்கப்பட்ட விடயம், இதுவாகும். இதனை சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இப்பெல்லாம் பலர் வீட்டை சுற்றி நிலத்தினை உயர்த்தி, சீமெந்து கற்கள் பதிச்சு தங்கள் வளவுக்குள் மழை நீர் தேங்காதவாறு வீதிக்கு அனுப்புகின்றார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் வற்றுகிறது என சொல்கிறார்கள். மழை பெய்து, மழை நீர் கணுக்கால் அளவுக்கு தேங்கி நின்றாலே "ஐயோ வெள்ளம்" என்கிறார்கள்.
அந்த நீரினை வாய்க்கால் ஊடாக கடலுக்கு அனுப்பினால் நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படும் ? நிலத்தடி நீரை சேமிக்கும் நோக்குடன் கட்டப்பட்ட நன்னீர் தேக்கங்களில் அணைக்கட்டுகளை உடைக்கின்றார்கள். கணுக்கால் அளவு தண்ணீர் ஏறமுதலே வான் கதவுகளை திறவுங்கள் என்கிறார்கள்.
யாழ்.குடாநாட்டினை பொறுத்தவரைக்கும் நிலத்தடி நீர் ஆதாரமே உண்டு, ஐயோ வெள்ளம் ஐயோ வெள்ளம் என மழை நீரை கடலுக்கு அனுப்பிட்டு என்ன செய்ய போகிறோம்? அன்று முதல் இன்று வரை வெள்ளம் வெள்ளம் என்கிறோமே தவிர , மழை நீர் சேகரிப்பு தொடர்பில் எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் நாம் எடுக்கவில்லை.
தீவகங்களில் சில இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை செயற்படுத்தப்பட்டள்ள போதிலும், அவையும் முழுமையான வெற்றி என சொல்ல முடியவில்லை என அக் கலந்துரையாடலில் கதைக்கப்பட்டது.
சரி, இதையெல்லாம் எல்லாம் நாம யோசித்து என்ன செய்ய , " ஐயையோ வெள்ளம் வெள்ளம்" என நாலு படத்தை போட்டுட்டு , றோட்டில வெள்ளம் நிற்கும் படம் ஒன்றில் படகு ஒன்று செல்வது போல எடிட்டிங் செய்து போட்டுட்டு, நாம் நம்ம வேலையை பார்ப்போம். பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் என குடிக்க நீரினை காசு கொடுத்து வாங்குவோம். இந்த நிலைமையை விரைவில் சரிசெய்ய வேண்டும். மழைநீரை சேமிப்பதன் மூலமே இந்த பிரச்சனை சரி செய்ய முடியும்.
No comments:
Post a Comment