health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

பம்பலப்பிட்டி பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர்.....!

 


பம்லப்பிட்டி போரா பள்ளிவாசல் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பதில் நீதவான் ஷரானி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி, அதிமலே வீதியை சேர்ந்த ஹுசேமா அப்பாஸ் கென்போய் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து பெற்ரோல் குண்டு ஒன்றை கொண்டுவந்து பள்ளிவாசல் மீது வீசியுள்ளார். எனினும் அது வெடிக்காதமையினால் மீண்டும் வீட்டிற்கு சென்று மற்றுமொரு பெற்ரோல் குண்டு ஒன்று வீசியுள்ளார் என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் சந்தேக நபரால் வீசப்பட்ட பெற்ரோல் குண்டு வெடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment