இலங்கையில் விபச்சார தொழிலை சட்டமாக்க வலியுறுத்தும் பெண் எம் .பிமார்!
இலங்கையில் விபச்சார தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டுமென பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியின் போதே அவர்கள் இந்த சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.
இதேவேளை சுற்றுலாத்துறையை மேம்படுத்த இரவு நேர பொருளாதாரம் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment