போராட்டத்தால் பெண்ணுக்கு கிடைத்த சிலிண்டர்!
வாதுவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இன்று, லிற்றோ எரிவாயு சிலிண்டர் முகவர் கடைக்கு வந்த பெண் ஒருவர், சமையல் எரிவாயு சிலிண்டர் தருமாறு கோரி சிலிண்டர் ஏற்றிவந்த லொறியை வழிமறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க ஏராளமானோர் கடைக்கு வர, அங்கே அப்பெண் வரிசையில் நின்றிருந்தார். இநிலையில் மதியம் 1.30 மணியளவில் எரிவாயு ஏற்றிவந்த லொறி வந்தது, இதன்போது அந்த முகவருக்குப் போதிய எரிவாயு வழங்கப்படாததால் அப்பெண்ணால் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியவில்லை.
இதன் காரணமாக கோபமுற்ற பெண் "நீங்கள் எனக்கு சிலிண்டர் கொடுக்கவில்லை என்றால், லொறி என் உடல் மீது ஏறிதான் செல்லும் எனக் கூறியதுடன் ," கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்பெண் வாகனத்தை செல்லவிடாது தரையில் அமர்ந்தார்.
இந்த போராட்டத்தால் வளாகத்தில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டதுடன், எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்ல முடியாமல் தடைப்பட்டது.
இதனையடுத்து சம்பவத்தை கேள்வியுற்ற வாத்துவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் பெண்ணுடன் பேசி சமாதானப்படுத்தி உறுதியளித்ததன் பேரில் அவர் வீதியில் இருந்து எழுந்து நிலையில், கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றினை பொலிஸார் அவரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment