இலங்கையில் கோவிட்டால் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் தொழிலை இழந்தனர்!
கோவிட்-19 தொற்று நோய் பரவல் ஆரம்பமான கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை, ஏற்றுமதி ஆடை உற்பத்தி துறையுடன் தொடர்புடைய சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தொழில்களை இழந்துள்ளதாக சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 தொற்று நோய் பரவலுக்கு முன்னர், ஆடை ஏற்றுமதித்துறையில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் தொழில் புரிந்து வந்தனர். தற்போது மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை மாத்திரமே தொழில் புரிந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில் ஊழியர்கள் எவரும் தாம் செய்து வந்த தொழிலை இழக்க மாட்டார்கள் என அரசாங்கம் கூறியிருந்த போதிலும் சர்வதேச கொள்வனவாளர்கள் மற்றும் முதலாளிமார் ஊழியர்களின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்து தொழில் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் ஊழியர்களின் வெற்றிடங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளாது, 5 லட்சம் ஊழியர்களிடம் பெற்றுக்கொண்ட சேவைகளை அதன் அரைவாசி எண்ணிக்கையிலான ஊழியர்களை பயன்படுத்தி பெற்றுக்கொள்வதாகவும் அன்டன் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment