வியாழேந்திரன் வீட்டின் முன்னால் கொல்லப்பட்ட இளைஞர்; கண்ணீர்விட்டு அழும் தாய் தந்தை...!
மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது .
இதன்போது எனது மகனை அடித்து கொலை செய்ததும் இல்லாமல், தம்மை நாய் போன்று அலைய வைக்கின்றதாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தாய் தந்தையர் கண்ணீர்விட்டு அழுகின்றனர். இது அதொடர்பில் அவர்கள் கூறுகையில்,
இன்று காலை வழக்கு விசாரணைக்காக 08.00 மணியளவில் தாங்கள் வந்திருந்த போதும் எங்களுடைய வழக்கு தாமதமாகவே கூட்டப்பட்டதாக தெரிவித்த அவர்கள், நாங்கள் எதிர்பார்ப்பது என் மகனுடைய கொலைக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் கூறினர். நீதிபதி ஐயா 15ஆம் திகதி விளக்கம் பெறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார் இருந்தபோதிலும் எங்களை மாறி மாறி ஒவ்வொரு இடம் அலைய வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
உடல் கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றதாக இன்று நீதிபதி ஐயா எங்களிடம் கேட்டபோது நாங்கள் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சென்றபோது அவர்கள் ஏறாவூர் பொலிஸாரிடம் கேட்குமாறு கூறுகின்றார்கள்.
மட்டக்களப்பு பொலிசார் இவ்வாறு எங்களை அங்கேயும் இங்கேயும் அலையவைத்து கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் திட்டமிட்டு எனது மகனை அடித்து சுட்டு கொலை செய்துவிட்டு இன்று எம்மை நாய் போன்று அலைய வைக்கின்றார்கள் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனது மகன் பிழை செய்திருந்தால் அவர்களது சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோக்களை காட்டலாம் தானே எங்களது மகன் பிழை செய்திருந்தால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ள தயாராக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டனர்.
மகன் இறந்து இன்று 5 மாதங்கள் கடந்து விட்டது நாங்கள் நீதிபதி நல்லதொரு முடிவை தருவார் என எதிர்பார்க்கின்றோம் எனவும் உயிரிழந்தவரின் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த வழக்கிக்கின் சந்தேகநபர் 14 நாட்கள் மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்
No comments:
Post a Comment