health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

அமெரிக்க செல்ல அதிக ஆர்வம் காட்டும் இலங்கையர்கள் - குழப்பத்தில் அரசாங்கம்....!



 சமகாலத்தில் பெருமளவு இலங்கை இளைஞர், யுவதிகள் வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றமை அரசாங்கத்திற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


வெளிநாடு செல்வதற்காக நாளாந்தம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 2500 வரை வரை உயர்ந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் நாளாந்த கடவுச்சீட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் நாள் ஒன்று 500 கடவுச்சீட்டு விண்ணபங்களே கிடைத்தன. எனினும் தற்போது அந்த எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அமெரிக்கா உட்பட நாடுகள் நாட்டை வெளிநாட்டவர்களாக திறந்து வைத்துள்ளன. கிரீட் கார்ட் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளது. அத்துடன் பல நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் காரணமாக இலங்கையர்கள் அதிக அளவில் கடவுசசீட்டிற்கு விண்ணப்பிப்பதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் தற்காலிகமாக கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை இளைஞர்களில் பெரும்பான்மையினர் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதற்கு அதிகமாக ஆர்வம் காட்டுவதனை அவதானிக்க முடிந்தது.


இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் அதற்கு பிரதான காரணமாகும். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுவதற்காகவும் அவர்களை நாட்டிற்கு தொடர்ந்தும் தக்க வைப்பதற்கும் அவசியமான வேலைத்திட்டம் ஒன்றை உரிய பிரிவுகள் தயாரிக்க வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான நிலை தொடருமாயின் இலங்கையில் ஆளனி வெற்றிடங்கள் அதிகரிக்கலாம் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment