இலங்கையில் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகம்...!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1938 என்ற தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன் பள்ளி , ஆரம்ப கல்வி, மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட தொலைபேசி எண்ணானது 24 மணித்தியாலமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் கட்டணமின்றி 1938 இலக்கம் ஊடக பெண்களுக்கான இடையூறுகள் தொடர்பில் தெரியப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment