மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்!
மகளின் காதலனை மிரட்டுவதற்காக துப்பாக்கியுடன் காதலனின் வீட்டுக்குச் சென்ற தந்தை , காதலன் மற்றும் அயலவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், உயிரிழந்தவர் கரந்தெனிய மடகும்புர பகுதியைச் சேர்ந்த51 வயதான முச்சக்கர வண்டி சாரதி என்றும் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
உய்ரிழந்தவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மகளின் காதலனின் தாயார் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 31ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் , பெண்ணின் தந்தை மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் களுவலகொட ஊரகஸ்மன்ஹந்தியவில் உள்ள மகளின் காதலனின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று மகளுடனான காதல் உறவை கைவிட கூறி காதலனை மிரட்டியபோது ஏற்பட்ட தர்க்கத்தில் காதலனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் காதலனின் தாயார் காயமடைந்தார்.
இதனையடுத்து அவர் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்த தயாரான போது, மகளின் காதலனும் அயலவர்களும் சேர்ந்து, அந்த நபரையும், கூட வந்தவரையும் தாக்கியதுடன் அவர் கொண்டு வந்த துப்பாக்கியையும் உடைத்தனர்.
No comments:
Post a Comment